மாவீர மகுடங்கள்

மாவீர மகுடங்கள்

இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.

நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள்
நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த
போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும்.
ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை, இந்த இழப்புக்கள்
எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.