தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70வது அகவை நாள் 26.11.2024
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70வது அகவை நாள் 26.11.2024
சூரியப் புதல்வனுக்கு வாழ்த்துரைக்கும் காலமிது - எம்
தமிழீழப் பெருந்தலைவன் உதித்த பொற் காலமிது - நாம்
முரசு முழங்கிடுவோம், வானதிர வாழ்த்தி வணங்கிடுவோம்,
வானிருந்தும் எம் மாமணிகள்; வாழ்த்திடுவர், வாழியவே,
வானேறி வலம் வந்த எம் வரிப்புலித் தலைவனே! வாழியவே,
செந்தமிழ் வீரமது பார்போற்ற வலம் வந்த
போர்ப்படை மூன்றும் தந்த முதல்வனை வாழ்த்திடுவோம்,
தமிழ் வாழ ஒளி தந்த உத்த புருஷனே!
விலைபோகா வீரத்தின் வீரத் திருமகனே!
வளி தவறா வரிப்புலியை வகுத்தெடுத்த மகனே வாழ்க.
ஆழ்கடலும், ஏழ் கடலும் உன் வீரம் ஆர்ப்பரிக்க
உலகில்லா 'கரும் புலிப்படை' பெற்றெடுத்த கரிகாலன் நீ வாழ்க.
ஏழுலகும் கூடிநின்று எதிர்த்து நின்ற போதினிலும்,
எள்ளளவும் பிசகாது எரிமலையாய் எழுந்து நின்றாய்,
மரணமே மண்டியிடும் வீரத்தின் காவியநாயகனே! வாழிய வாழியவே!
யாம் கேட்ட ஈழமதை இனிதே நாம் பெற்றிருப்பின்,
உலகது உன்; காலில் மண்டியிட்டே நின்றிருக்கும்,
தடைகள் பல தாண்டிவந்து, ஓயாத அலைகள் தந்து,
உலகப் புகழ் பெற்று நிற்கும் ஒப்பற்ற தலைவா வாழ்க.
உலகத்தில் நாம் வாழ முகவரி தந்த வேங்கை வாழிய வாழியவே!
தடம்புரலா இலக்குடனே,
தடை உடைத்து ஒளி கொடுத்து
தரணி வலம் வந்த நீங்கள் தந்த வீரம்,
தணியாது என்றும் எம் தமிழர் நெஞ்சமதில்,-நாளும்
தொழுவோம் எம் குலதெய்வமே பிரபாகரா! வாழிய வாழியவே!
அழகான ஈழமதில் யாரும் அநாதையில்லை என்று
அன்னையாய், தந்தையாய் அரவணைத்தாய் முதியோரை
அவர்கள் நல் வாழ்வுக்காய் நிறுவிநின்றாய் அன்புச்சோலை,
மழலைகள் அருகில் நீ மழலையாய் அவதரிப்பாய்,
மண்ணகத்தில் என்றும் நீ மான்புமிகு தலைவனானாய்.
காலம் தந்த தலைவன் நீ ஞாலம் போற்றும் இறைவன் நீ
காவல் தெய்வம் என்றே நாம் என்றும் போற்றும் புனிதன் நீ
எங்கள் தெய்வம் பிரபாகரனே....
தமிழ்த் தேசியத்தின் தலைவனும் பிரபாகரனே.....
வாழ்க வாழ்க வாழியவே!